Google
 

Sunday, January 28, 2007

மீண்டும் ஞானி – 10. பொது எது

மீண்டும் ஞானி – 10. பொது எது

ஒரு மாணவன் எழுந்து கேட்ட கேள்வி மிகவும் நகைச்சுவையாக இருந்தது.

ஞானி, பொது இடங்களான திரையரங்குகள், பேருந்து நிலையங்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் கழிப்பிடங்கள் அசுத்தமாக இருக்கின்றனவே. பல இடங்களில் அசிங்கமான படங்களும் சொற்களும் ஏன் எழுதுகின்றனர். இதற்கு என்ன காரணம்.

ஒரு ஆசிரியர் அந்த மாணவனை இடைமறுத்தி, இது என்ன கேள்வி என்று கேட்டார்.

ஞானி, அவரை மீண்டும் இடைமறுத்தி, மாணவன் கேட்ட கேள்வியி்ல் தப்பேதும் இல்லை என்று சொல்லிக் விட்டு என்னிடம் குறைந்த தொனியில் ஏதோ சொன்னான். சரியென்று வெளியே சென்றேன். பிறகு அவன் பேசியதை பிறர் சொல்லக் கேட்டு இங்கு எழுதுகிறேன்.

ஞானி மாணவனை பார்த்து பேசினான்.

மனிதன் வக்கிர புத்திகளை கொண்டவன். மனிதன் தனியாக இருக்கும் போது தான் அவன் மிக கேவலமாக நடந்துக் கொள்கிறான். இதற்கு காரணம் தன்னை யாரும் பார்க்க வில்லை என்பதனால். அவனுடைய வக்கிரமான புத்திகள் தான் தவறான உறவுகளும், பழக்க வழக்கங்களும், ஆபாச புத்தகங்கள், திரைப்படங்கள் என்ற வெளிப்பாடாக வெளிவருகின்றன். பல சமயம் இது போன்ற வக்கிரங்களை அவன் வெளிபடுத்த விரும்பினாலும் சமூகத்தின் கட்டமைப்பு அவனை தன் சொந்த பெயரில் இவற்றை செய்ய தடுக்கிறது. பல முறை அவன் பெயரில்லாமல் இந்த காரியங்களை செய்கிறான்.

மனிதனின் மனதில் அசிகங்கள் தான் அதிகம். அந்த அசிகங்களை அவன் நேரடியாக சம்பந்தப்படாத இடங்களில் அவிழ்த்து விடுகிறான். உதாரணமாக உன் வீடு அசிங்கமாக இருந்தால் உன் வீட்டில் உள்ளவர்கள் தான் அதற்கு பொறுப்பு. அதனால் உன் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறாய். ஆனால் உன் தெரு குப்பை கூளமாக இருந்தால் நான் இல்லை நான் இல்லை என்று யாரும் பொறுப்பேற்பதை தவிர்ப்பீர்கள்.

இப்படி பேசிவிட்டு எதிரில் இருந்த கண்ணாடி கோப்பையிலிருந்த தண்ணீரை எடுத்து மெதுவாக அருந்தினான். மிகவும் மெதுவாக அருந்தினான். அந்த நேரத்தில் அவன் சொன்னபடியே அனைத்து மாணவர்களுக்கும் நான் கடையிலிருந்து வாங்கி வந்த சாக்லெட்டுகளை கொடுத்துவிட்டு மீண்டும் மேடைக்கு சென்று அமர்ந்தேன்.

என்னை பார்த்த ஞானி, நீயும் எடுத்துக் கொள் நண்பா என்றான்.அவன் என்னை நண்பா என்று அழைத்தது எனக்கு நோபல் பரிசு கிடைத்தது போல் இருந்தது.

நான் ஒரு சாக்லெட் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு அவனை பார்த்தேன்.

ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்து விட்டு அரங்கத்தை பார்த்து பேசினான்.

அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து வெளியே செல்லுங்கள் என்றான். அனைவரும் அரங்கத்தின் வாயிலுக்கு சென்றனர்.

ஞானி எழுந்து, இங்கிருக்கும் நாற்காலிகளின் கீழ் இப்போது கொடுத்த சாக்லெட்டின் காகித உறை பார்க்கிறீர்களா என்றான். அனைவரும் வெட்கி தலை குனிந்தனர்.

பெரும்பாண்மையான நாற்காலிகளின் கீழ் காகிதங்கள் கீழே கிடைத்தன.

அனைவரையும் மீண்டும் வந்து அமரச் சொன்னான்.

கேள்வி கேட்ட மாணவனை எழுந்து நிற்கச் சொன்னான். என்ன புரிந்தது உனக்கு என்று கேட்டான்.

மாணவன், அனைவரும் தங்கள் இனிப்புகளை திறந்து தின்றுவிட்டு காதித உறைகளை கீழே வீசிவிட்டார்கள் என்றான்.

ஹா ஹா, அது தான் இல்லை தம்பி. இவர்கள் யாரும் அவரவர் நாற்காலிகளின் கீழே வீசவில்லை. தன்னுடைய குப்பை பிறருடைய நாற்காலியின் கீழ் வீசியிருக்கினர். இது தான் நீ கேட்ட கேள்விக்கு பதில்.

என்னை எழுந்து நிற்கச் சொன்னான். சட்டென்று என் சட்டைப் பையி்ல் கையை விட்டான். நான் வெளியே செல்லும் போது போடலாம் என்று எடுத்து வைத்த சாக்லெட் ராப்பரை எடுத்தான். அரங்கத்துக்கு காட்டினான்.

இவன் மனிதன். ஞானியாக மாறிக் கொண்டிருக்கும் மனிதன். குப்பையை இவன் இங்கு வீசியிருந்தாலும் இவன் மீது நீங்கள் கொண்ட மதிப்பு மாறியிருக்காது. ஆனால் சமூக சிந்தனையுடன் இதை குப்பைத் தொட்டியில் வீச எடுத்து வைத்திருக்கிறான்.

உன் வயிற்றில் நீ மலம் தக்கவைத்து பிறகு கழிக்கிறாய் அல்லவா. அது போல உன் குப்பைகளையும் கழிக்க வேண்டிய இடத்தில் கழி.

அது மனத்தில் உள்ள குப்பைக்கும் பொருந்தும் என்றான். அரங்கத்தில் கைத்தட்டல் 5 நிமிடம் தொடர்ந்த ஒலித்தது.

Google
 

Monday, January 08, 2007

மீண்டும் ஞானி - 9. ஆசிரியர்

மீண்டும் ஞானி - 9. ஆசிரியர்


மாணவர்கள் மாற்றி மாற்றி கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். நிறைய விஷயங்களை நானும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்து.

15 நிமிடங்கள் இடைவெளி கொடுத்தனர். நானும் ஞானியும் வெளியே தேனீர் எடுத்துக் கொண்டு வந்து நின்றோம். அப்போது ஒரு ஆசிரியர் வெளியே வந்தார்.

அரங்கத்தின் அருகில் இருந்த இடைவெளியி்ல் வந்து நின்று ஒரு சுருட்டை எடுத்து புகைத்தார். ஞானியை பார்த்து ஒரு நட்பு புன்னகை வீசிவிட்டு புகைப்பெட்டியை நீட்டி, சிகரெட் என்றார்.

நீ ஆசிரியன் தானே என்றான் ஞானி காட்டமாக.

ஆம்.

நீயே பள்ளி வளாகத்தி்ல் புகைப்பிடித்தால் மற்றவர்களுக்கு என்ன கற்றுத் தருவாய்.

அந்த ஆசிரியர் அதிர்ந்து போனார். இதை சற்றும் எதிர்பார்க்கவி்ல்லை.

மாணவர்கள் என்னை பார்த்தா புகைப்பிடிக்க கற்றுக் கொள்கிறார்கள். பள்ளியை விட்டு வெளியே போன பிறகு பல பேர்களை சந்திக்கிறார்கள். அங்கிருந்து புகைபிடிக்க கற்றுக் கொண்டால் அதற்கும் நான் தான் காரணமா என்றார் தன் மீதுள்ள குற்ற கறையை அகற்றுபவர் போல்.

குழந்தை வளரும் போது தன் தந்தையை முன்னோடியாக பார்க்கிறான். பிறகு தனது ஆசிரியனை முன்னோடியாக பார்க்கிறான். கல்லூரி முடியும் வரையில் அவன் யாராவது ஒரு ஆசிரியரையோ பேராசிரியரையோ வாழ்கையின் மைல்கல் போல் பாவிக்கிறான். தந்தையிடமும் ஆசிரியரிடும் இருக்கும் பழக்கங்கள் நல்லவையா கெட்டவையா என்பதை தெரிந்துக் கொள்ளும் பக்குவம் வரும் முன்பே அந்த பழக்கங்கள் அவனுக்கு பிடித்து விடுகின்றன்.

நீயும் இவர்கள் ஆசான். நீ வீட்டிலும் ஒரு தந்தை. ஆசிரியர் அனைவரும் பாடம் கற்பிப்பவர் அல்லர்.

போ, முதலில் பாடம் கற்பிக்கும் அளவுக்கு உனக்கு தகுதிகள் இருக்கிறதா என்று யோசி. தவறுகளுக்கு சப்பை கட்டும் பழக்கத்தை விடுத்து ஒரு சமுதாயத்திற்கே முன்னோடியாக இருக்கும் தகுதி உன்னிடத்தில் இருக்கிறதா என்று பார். பிறகு வா என்னிடம்.

நான் அதிர்ந்து நின்றேன். அந்த ஆசிரியரின் உடல் நடுங்குவதை பார்த்தேன். அவர் உடல் முழுக்க வியர்த்திருந்தது.

அரங்கத்திலிருந்து மீண்டும் அழைப்பு வந்ததால் நானும் ஞானியும் உள்ளே நுழைந்தோம்.

Google
 

மீண்டும் ஞானி – 8. காஷ்மீர்

மீண்டும் ஞானி – 8. காஷ்மீர்

ஐயா, இதுவரை அனைவரும் பொதுவான விஷயங்களையே கேட்டார்கள், நான் இன்றைய இந்தியாவை உலக்கும் ஒரு பிரச்சனையை பற்றி கேட்கலாமா என்று கேட்டான் ஒரு மாணவன்.

கேள் என்றான் ஞானி.

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு உண்டா?

ஆஹா, சரியான கேள்வி என்று நினைத்தேன். அனைவரும் ஆர்வமாக ஞானியை பார்த்தார்கள்.

தீர்வு உண்டு. லஞ்சைத்தை ஒழிக்க வேண்டும் என்றான் ஞானி.

என்ன என்று அந்த மாணவன் குழப்பத்துடன் கேட்டதுடன், அனைவரும் குழப்பத்துடன் அவனை பார்த்தார்கள்.

ராணுவம் தான் ஒரு நாட்டில் தலை சிறந்த ஊழல் இடமாக விளங்குகிறது. தினமும் பல கோடி செலவு செய்து எல்லைகளை பாதுகாப்பதாக சொல்வதெல்லாம் வெறும் பேத்தல். ஐந்து குண்டு வெடித்து விட்டு ஆயிரம் குண்டு வெடித்ததாக சொல்லி கணக்கு எழுதிறார்கள். இறந்த ராணுவ வீரனின் சவப்பெட்டி வாங்குவதில் கூட ஊழல் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

நம் ராணுவத்தின் முதல் நண்பன் பாகிஸ்தானின் ராணுவம் தான். இரண்டு பேரும் இத்திருட்டில் கூட்டு. இது ஒரு எல்லை பிரச்சனையோ மதப் பிரச்சனையோ இல்லை. போர் முடிந்து சமாதானம் வந்தால் பொய் கணக்கு எழுதி பணம் பார்க்க முடியுமா.

எப்படி ஒரு சாதாரண குடி மகன் எல்லையில் எத்தனை குண்டு வெடித்தது என்று கணக்கு பார்க்க முடியாதோ அது போலத்தான் வரி கட்டும் நீங்கள் அரசாங்கம் செலவு செய்வதில் எத்தனை உண்மை எத்தனை பொய் என்று அறியமுடியாமல் கோடான கோடி பணத்தை தினமும் இழக்கின்றீர்கள்.

கார்கில் என்று ஒன்று வராவிட்டால் வருடாவருடம் பாதுக்காப்புகாக நிதி திட்டத்திலிருந்து அதிக பணம் கேட்க முடியுமா? போர்கள் குடிமக்களை பயத்துடன் இருக்க உதவுகின்றன. போர்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்க ஒவ்வொரு நாட்டு அரசியல்வாதிகளும் செய்யும் நாடகம்.

Wars are nothing but well rehearsed dramas by the politicans and the army to ensure that people remain scared, and are always under pressure of wars. As security budgets are never questioned, people in-between end-up in making hell a lot of money.

சுருங்கச் சொன்னால் லஞ்ச ஊழலை ஒழித்தால் காஷ்மீர் பிரச்சனை தீரும். இரண்டு நாடுகளிலும் அமைதி நிலவும். சோற்றுக்கு வழியில்லாமல் இருக்கும் மக்களுக்கு சோறு கிடைக்கும். மலம் கழிக்கும் இடங்களை கூட வெள்ளியாலும் தங்கத்தாலும் செய்து வைக்க எண்ணும் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கொட்டம் அடங்கும். அடங்க வேண்டும்.

Google
 

Wednesday, January 03, 2007

Thirukural

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்


Thirukural With voice Tamil and English(G.U.Pope)

Download link:

http://rapidshare.com/files/10004354/Thirukural.rar

Google
 
மீண்டும் ஞானி – 7. மதமாற்றம்

இன்னொரு பிள்ளை எழுந்து நின்று, ஐயா, மதமாற்றம் சரியானதா என்று கேட்டான். போட்டு தாக்குங்கடா பசங்களா என்று குஷியாகிவிட்டேன் நான்.

மதமே கூடாது என்று கூறுகிறேன் நான் என்றான் ஞானி.

அது சரி ஐயா. இன்றைய நிலையில் மதங்கள் இருக்கின்றனவே. ஆக இன்றைய சூழ்நிலையில் உங்கள் கருத்து என்ன.

மதமாற்றம் மனிதனின் பாதுகாப்பற்ற Insecurity, பயந்த நிலையையே காட்டுகிறது. மனிதன் தான் தனியாக இருக்க விரும்பாமல் தன் கூட்டத்தை அதிகப்படுத்திக் கொள்ளவே இந்த முயற்சி. ஆனால் நான் முன்பு கூறியது போல மனிதனால் கூட்டமாக இருந்தாலும் ஒற்றுமையாக இருக்க முடியாது.

முதலில் உலகில் இருக்கும் மதங்களை பாருங்கள். எல்லா மதங்களிலும் ஆயிரமாயிரம் பிரிவுகள். தனி கோவில்கள், தனி கூட்டங்கள், தனி சின்னங்கள், குறியீடுகள், வழிபாட்டு முறைகள். இவை மதங்களில் இருக்கும் வேறுபாடுகள் அல்ல. ஒரு மதத்தினுள் இருக்கும் வேறுபாடுகள். முதலில் ஒவ்வொரு மதங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகள் மறந்து ஒரு கிளையாக மாறி நிற்கட்டும். பிறகு மற்ற மதங்கள் தவறு என்றும் தம் மதம் சரியென்றும் மற்ற மதத்தினரை தம் மதத்தில் சேருமாறும் அழைக்கட்டும்.

உனக்கு பிற மதத்தின் கோட்பாடுகள் நன்றாக இருந்தால் அவற்றை உன் மதத்தில் இருந்துக்கொண்டே பின்பற்றலாம். அதற்கு அந்த மதத்திற்கு மாறவேண்டும் எனும் அவசியம் இல்லை. மேலும் உலகில் அனைத்து மதங்களிலும் நல்ல கோட்பாடுகள் உள்ளன. நீ உன் மதத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை பின் பற்றுகிறாயா முதலில்?

மதம் மாற்றம் என்பது ஒரு கடவுளின் மீது நம்பிக்கை போய் இன்னொரு கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் ஏற்படுகிறது. அப்படியென்றால் நீ மாறும் மதத்தை கடைபிடிப்பவர் அனைவரும் கஷ்டமே இல்லாமல் சுகமாக இருக்கிறார்களா?

சிலர் காசுக்காக மாறுகிறார்கள். அவர்களைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. மதத்தை வியாபாரமாக்கும் வியாபாரிகள்.

சிலர் மன நிம்மதிக்காக மாறுகிறார்கள். அவர்களை என்னவென்று சொல்ல.

சிலருடைய மதத்தில், ஒருவனை உன் மதத்திற்கு மாற்றினால் உனக்கு சொர்க்கம் என்று கூறுகிறார்கள். அதாவது இது போல ஒருவர் சொர்க்கத்திற்கு சென்று இவரிடம் வந்து கூறுகிறார், ஐயா, நான் ஒருவரை என் மதத்திற்கு மாற்றியதால் நான் சொர்க்த்தில் இருக்கிறேன், நீயும் அப்படி செய்தால் சொர்க்கத்திற்கு வருவாய் என்று. வெறும் பிதற்றல் இல்லையா?

ஒரு மதத்தில் பிறப்பது நீ கேட்டு வருவதல்ல. எப்படி ஒரு தாயிடம் பிறக்க வேண்டும் என்று நீ கேட்பதில்லையோ அது போலதான். ஆக ஒரு தாயிடம் பிறந்த பிறகு, எனக்கு இந்த தாய் வேண்டாம், வேறு தாயிடம் செல்கிறேன் என்று சொல்வாயா.

மதம் என்பது தாய் போல. பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அதை மாற்றாதே. மற்ற மதத்தை தூற்றாதே. அவைகளையும் போற்று.

மதம் எனும் மதம் பிடித்து அலையாதே.

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]