Sunday, December 31, 2006
WISH YOU A HAPPY NEW YEAR - 2007
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
வலைப்பக்கத்திற்க்கு வருகை தரும் அனைவருக்கும் எனது மனம் கனிந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உங்கள் அனைத்து லட்சியங்களும் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.
WISH YOU A HAPPY NEW YEAR - 2007
வலைப்பக்கத்திற்க்கு வருகை தரும் அனைவருக்கும் எனது மனம் கனிந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உங்கள் அனைத்து லட்சியங்களும் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.
WISH YOU A HAPPY NEW YEAR - 2007
மீண்டும் ஞானி – 6. கடவுள்
மீண்டும் ஞானி – 6. கடவுள்
இன்னொரு மாணவன் எழுந்து கேள்வி கேட்டான். எனக்கு ஒரு சந்தோஷம். நான் இதே கேள்வியை கேட்டிருந்தால் போடா முட்டாள். நீ மனிதன் என்று சொல்லிவிட்டு போயிருப்பான். இப்போது நன்றாக மாட்டிக் கொண்டான். என்ன சொல்கிறான் என்று பார்க்கலாம் என்று ஆவலானேன்.
கடவுள் இருக்கிறானா?
கடவுள் இருக்கிறானா என்று உன் கேள்வியை பார்த்தால் கடவுள் ஒரு ஆண் என்று முடிவு செய்தது போல் இருக்கிறதே. இது ஆண் ஆதிக்கம் என்று பின்னால் இருக்கும் பெண்கள் கூக்கூரலிடுகிறார்கள் பார்.
நக்கல் தான் ஞானிக்கு என்று அந்த நகைச்சுவையை ரசித்தேன்.
கடவுள் இருக்கிறாளா என்று சட்டென்று மாற்றினான் அந்த சிறுவன்.
கடவுள் அவனா, அவளா, அதுவா என்று மனிதர்கள் குழம்பி நிற்பதை காண் என்றான் என்னை பார்த்து. பிறகு கூட்டத்தை பார்த்து பதில் சொல்ல தொடங்கினான்.
கடவுள் உருவமற்றவர் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். அதாவது கடவுள் எப்படி இருந்தார், இல்லை இருக்கிறார் என்று மனிதர்கள் கூறுகிறார்கள். இன்னொரு சாரார் கடவுள் இப்படித்தான் இருந்தார், இல்லை இருக்கிறார் என்று உருவங்கள் கொடுக்கிறார்கள். இவர்கள் ஆதாரமாக கூறுவதெல்லாம் மத நூல்களையும் வேதங்களையும். அதாவது ஆண்டவனே வந்து அளித்ததாக கூறுப்படும் புனித நூல்களாம் இவை. இது எப்படி. கடவுள் ஒரு பிராந்தியத்தில் சென்று நான் உருவமற்றவன் என்றும் இன்னொரு பிராந்தியத்தில் நான் உருவமுள்ளவன் என்றும் கூறித்திரிகிறான். இது சரியாகப்படுகிறதா உனக்கு?
மேலும் அவன் தன்னை இவ்வாறு வணங்கவேண்டும் என்பதையும் வெவ்வேறான வகையில் கூறியிருக்கிறான்.
உலகைப்படைத்தேன் உனக்காக, உன்னை படைத்தேன் என்னை வணங்க என்று மனிதனைப்பார்த்து கடவுள் கூறுவதாக கூறுகிறார்கள். அதாவது ஒரு நிறுவனத்தின் மேலாளர் 50 பேரை வேலைக்கு சேர்த்து நீ தினமும் என் புகழ்பாடி வந்தால் உனக்கு சம்பளமும் வேலையில் பதவி உயர்வும் கிடைக்கும் என்பது போல் இருக்கிறது.
சூரியன் எந்த திசையில் உதிக்கிறது என்று அந்த மாணவனைப் பார்த்து கேட்டான் இடையில்.
கிழக்கு.
தவறு.
என்ன சொல்கிறீர்கள் ஞானி.
ஆம் தம்பி. சூரியன் உதிப்பதில்லை. அது எங்கிருக்கிறதோ, அங்கே தான் இருக்கிறது. நீ எப்போது அதை காண்கிறாயோ அதை காலை என்றும் எந்த பக்கத்தில் காண்கிறாயோ அதை கிழக்கு என்றும் வரையறுத்தது மனிதன் தான். அது போல தான் கடவுளையும் அவன் வரையறுத்திருக்கிறான்.
கடவுளை மனிதன் தான் படைத்தான். அதனால் தான் இவ்வளவு குழப்பங்கள். மனிதர் நினைப்பது போல், அல்லது வரையறுத்தது போல் கடவுள் ஒரு அண்டத்தின் மறுக்கமுடியாது உண்மை, Universal Truth என்றே வைத்துக் கொண்டால், அந்த கூற்றில் எவ்வாறு இத்தனை சீர்கேடுகள், Irregularities இருக்க முடியும்.
உலகம் அனைவதும் ஒரு மொழி பேசும்படியாகவும் ஒரு மதம் பின்பற்றும் படியாகவும் செய்ய அந்த சர்வசக்தி படைத்த கடவுளால் செய்யமுடியாதா. வேண்டும் என்றே பல மதங்கள், பல மொழி வேதங்கள், படைத்து உலகத்தில் குழப்பம் விளைவிக்க அவன் என்ன விளையாட்டு பிள்ளையா. அப்படி அவன் ஏன் செய்தான் என்ற பதிலும் மனிதனிடத்தில் இல்லை, ஏன் செய்யவில்லை என்பதற்கும் பதில் இல்லை. ஆக கடவுள் எனும் கூற்ற ஒரு ஒட்டுறவு இல்லாத வலுவிழந்த கூற்றின் அடிப்படை, loosely-coupled theory என்பது நிருபணமாகிறது.
அரங்கமே அசந்து போயிருந்தது. ஒரு மாணவி எழுந்து, கடவுள் எனும் கூற்று நமக்கு தேவையா? என்று கேட்டாள்.
நான் வியப்புடன், ஞானி என்ன சொல்லப் போகிறான் என்று ஆவலாக இருந்தேன்.
ஆம். தேவை தான். மனிதன் தனக்கு புரியாத விஷயங்களையும் தனக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும் ஏதோ ஒன்றுடன் இணைக்க கடவுள் எனும் புரியாத பிரம்மாண்ட சக்தி பெற்ற ஒரு விஷயம் தேவை தான்.
கடவுள் இல்லையென்றால் இந்த உலகை படைத்தது யார் என்று கேட்டார் ஒரு ஆசிரியர்.
மனிதன் ஏன் எல்லாவற்றிற்கும் ஒரு தோற்றம்-ஒரு மறைவு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்? இதையே அடிப்படையாக வைத்து அவன் எல்லாவற்றையும் அறிய விழைகிறான். இவ்வுலகம் பல்வேறு புவியியல், வேதியல், உயிரியல் மாற்றங்களினால் உருவானது. இந்த மாற்றங்கள் நடந்துக் கொண்டே இருக்கும். அதை ஒரு உருத்தெரியாத சக்தியுடன் இணைப்பதோ, அதற்காக மதங்கள் உருவாக்குவதோ, மத சம்பிரதாயங்கள் உருவாக்குவதோ, அதற்காக சண்டையிடுவதோ, மனிதரின் முட்டாள்தனத்தை காட்டுகிறது.
கடவுளின் பெயரால் மனிதரின் மீதும் கொடுமைகளை நிறுத்து.
அறிவை தெய்வமாக்கு. அன்பை வேதமாக்கு.

Wednesday, December 27, 2006
மீண்டும் ஞானி – 5. மதம்
மீண்டும் ஞானி – 5. மதம்
கருத்தரங்கம் களை கட்டியிருந்தது. மாணவர்களும் உற்சாகமாக இருந்தனர். ஆசிரிய ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகத்தினரும் கூட கருத்தரங்கில் இணைந்துவிட்டனர். கருத்தரங்கு என்பதை விட ஞானி – கேள்வி-பதில்கள் நிகழ்ச்சியே நடந்து கொண்டிருந்தது.
ஒரு மாணவன் எழுந்து ஐயா, மதம் என்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டான்.
மதம் என்பதை பற்றி சொல்லும் முன் உங்களுக்கு ஒரு கற்பனை நிலையைப் பற்றி கூறுகிறேன் கேளுங்கள் என்று ஆரம்பித்தான்.
ஆஹா, ஞானியும் ஜோதியில் கலந்துவிட்டான். இத்தனை நாளாக இதுமாதிரி பொறுமையாக என் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறானா. பிள்ளைகள் என்றதும் ஞானிக்கே பொறுமை வந்துவிட்டதே என்று நினைத்தேன். அவன் பேசுவதை ரசித்தேன்.
நான் இங்கு ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை சொல்கிறேன்:
மனிதன் அவன் குணப்படி சண்டையிடும் உணர்ச்சி கொண்டவன். ஒரு கற்பனை செய்து பார்ப்போமே?
உலகம் முழுவதும் இந்துக்களாக மக்கள் மாறிவிட்டால் சண்டைகள் நின்றுவிடுமா? (மதச்சண்டை)
இல்லை.
பிறகு மேல் சாதி இந்து கீழ் சாதி இந்துவுடன் சண்டையிடுவான். இல்லையா.
உலகம் முழுவதும் மேல் சாதி இந்துக்களாக ஆகிவிட்டால் சண்டைகள் நின்றுவிடுமா? (சாதிச்சண்டை)
இல்லை.
பிறகு பணக்கார மேல் சாதி இந்துக்கள் ஏழை மேல் சாதி இந்துக்களுடன் சண்டையிடுவர்.
உலகம் முழுவதும் பணக்கார மேல் சாதி இந்துக்களாக ஆகிவிட்டால் சண்டைகள் நின்றுவிடுமா? (அந்தஸ்து சண்டை)
இல்லை.
பிறகு பணக்கார மேல் சாதி இந்து தன்னுடைய நிலத்திற்காகவோ இன்னொருவருடைய பெண்ணுக்காவோ மனைவியை அபகரிக்கவோ சண்டையிடுவான்.
ஆக நிலம் நீர் பெண் சொத்து நிறம் சாதி சமயம் என்று சண்டையிட வழிகளை தேடுவது தான் மனித இனம். இதில் பகுத்தறிவுக்கு இடமே இல்லை. ஏனென்றால் பகுத்தறிவு எள் அளவும் நமக்கு இருந்தால் இன்று உலகில் பல பிரச்சனைகளை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.
ஆக உலகத்தின் வயது ஏற ஏற முதிர்ச்சியோ அமைதியோ வருவதற்கு பதிலாக தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சண்டை, விஞ்ஞானத்தை பயன்படுத்தி அதிக அளவு இழப்பைக் கொடுக்கும் போர்கள், இதுவே நடந்துவருகின்றன்.
ஆக மக்கள் தொகைக்கு ஏற்ப நாச சக்தியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடவுளையும் மதங்களையும் மனிதன் தான் படைத்தான். அது மக்களை பிரித்து பகுத்து ஆளவே இந்த வேறுபாடுகள். இவை என்றும் மாறாது. கருப்பனும் வெளுப்பனும் இணைந்து புகைப்படத்திற்காக நிற்பார்கள். மனதால் என்றும் அவர்களை மாற்றமுடியாது. தேர்தல் வந்தால் இந்துவும் முஸ்லீமும் சேர்ந்து இஃப்தார் செய்வார்கள். ஆனால் இவர்கள் ஒன்று சேருவார்கள் என்று நினைப்பது வாதத்திற்கு மட்டுமே சரியாக இருக்கும்.
கேள்வி கேட்ட மாணவன் எழுந்து, அப்படியென்றால் இந்த சண்டைகள் நிற்காதா. அமைதியான உலகை எங்கள் சந்ததி பார்க்க முடியாதா என்று ஆதங்கத்துடன் கேட்டான்.
வரும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. எப்போது சரி தவறு என்று பிரித்தெடுக்கும் அறிவு வளர்கின்றதோ, எப்போது பொய்யை ஆதரித்து உண்மையை குழி தோண்டி புதைக்கும் பழக்கம் போகிறதோ, எப்போது பொய்யையும் புரட்டையும் அழிக்கும் ஞானம் வருகிறதோ, அப்போதே இந்த குருட்டுத்தனங்கள் விலகி அறிவொளி வீசத்தொடங்கும்.
அதுவரை என்ன செய்வது என்று கேட்டான் இன்னொரு மாணவன்.
அதுவரை காத்திருக்காமல் ஞானத்தை வளருங்கள், போலிகளை வளரவிடாமல் தடுக்க தயாராகுங்கள்.

மீண்டும் ஞானி – 4. ஞானி என்ன வாதி
மீண்டும் ஞானி – 4. ஞானி என்ன வாதி
இன்னொரு மாணவன் எழுந்து கேட்டான்.
நீங்கள் ஆத்திகவாதியா நாத்திகவாதியா.
ஆத்திகம் என்றால் என்ன என்று அந்த மாணவனையே திருப்பி கேட்டான் ஞானி.
ஆத்திகம் என்றால் கடவுளை நம்புவது என்று சொன்னான் அந்த மாணவன்.
இல்லை கடவுளை நம்புவதாக சொல்வது ஆத்திகம். நாத்திகம் என்றால் என்ன.
நாத்திகம் என்பது கடவுளை மறுப்பது.
மீண்டும் இல்லை. நாத்திகம் என்பது கடவுள் இருக்கிறார் என்பவர்களை எதிர்ப்பது. நான் ஆத்திகமும் இல்லை நாத்திகமும் இல்லை. நான் ஞானி. ஆத்திகம், நாத்திகம் மனிதனால் உருவாக்கப்பட்டது. அதற்கு மேலும் விருப்பு வெறுப்பு இல்லாத, கொலை, கற்பழிப்பு, கொள்ளை, பொய், புரட்டு இல்லாத உலகம் என்னுடயைது. என் உலகுக்கு வாருங்கள் என்றான் ஞானி.
ஏன் நீங்கள் நாத்திகம் ஆத்திகம் இரண்டும் தவறு என்று கூறுகிறீர்கள்.
ஆத்திகம் என்பது புரியாத கடவுள் எனும் ஒரு விஷயத்தை சுற்றி பொய்யான பழக்கவழக்கங்களையும் கலாச்சாரத்தையும் வளர்த்து மனிதர்களை மூடராக்கும் ஒரு விஷயம். இந்த புரியாத விஷயங்களை வைத்து மந்திரம், தந்திரம், சடங்கு, சாங்கியம், வாஸ்து, ஜோசியம், பரிகாரம் என்று இடுக்குகளை வைத்து பணம் பார்க்கும் சில பேர். இவர்கள் கடவுளை நம்புவதாக சொல்லி கோவில்களை இடிப்பவர்கள்.
நாத்திகம் என்பது கடவுளை நம்புவர்களை எதிர்த்து, பகுத்தறிவாதம் என்று சொல்லி, மத நூல்களை கொளுத்தி, கடவுள் சிலைகளை கொளுத்தி மற்றவர்கள் காலில் விழக்கூடாது என்று சொல்லி தன் காலில் மக்களை விழ வைக்கும் கூட்டம். இவர்களும் கோவில்களை இடிப்பவர்கள்.
இந்த இருவரில் நீ எந்த கூட்டத்தை சேர்ந்த நிற்ப்பாய்? இரண்டு முட்டாள்களுக்கும் இடையில் நீ நின்றால் உன்னை காப்பாற்றுவேன். ஆனால் நீ இரண்டு முட்டாள்களாக்கும் கூட்டதில் நிற்கிறாய். நான் என்ன செய்வது?
இந்த மடத்தனத்திலிருந்து வெளியே வா. மனிதத்துவம் என்று உள்ளது. அது என்ன என்று கண்டுக் கொள். பிறகு இந்த இரண்டு கூட்டங்களையும் ஓட ஓட விரட்டு.
அப்படியென்றால் நாங்கள ஞானியாவது எப்போது என்று கேட்டான் அந்த மாணவன்.
முதலில் மனிதானாக மாறுங்கள். பிறகு ஞானியாவதை பற்றி பேசலாம்.

Thursday, December 21, 2006
மீண்டும் ஞானி – 3. பரிணாம வளர்ச்சி
மீண்டும் ஞானி – 3. பரிணாம வளர்ச்சி
சொன்ன மாதிரி 14ம் தேதி பள்ளிக்கு வந்து சேர்ந்தான். அவன் தலைமை ஆசிரியருடம் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் பிள்ளைகளுக்கு ஒரு வார்த்தை கூறினேன்.
அன்புள்ள மாணவர்களுக்கு வணக்கம். நான் என்னுடைய நண்பர் ஞானியை அழைத்து வந்திருக்கிறேன். அவர் பேசும் விதத்தை தப்பாக எடுத்துக் கொள்ளாமல் அவரிடமிருந்து ஞானத்தை மட்டும் கிரஹித்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அமர்ந்தேன்.
ஞானி அரங்கத்தில் நுழைந்தான். அனைவரும் எழுந்து அவனுக்கு வணக்கம் சொல்லி அமர்ந்தார்கள். அவனும் வணக்கம் சொல்லி அமர்ந்தான்.
பிள்ளைகளில் தலைவன் எழுந்து எங்கள் அழைப்பை ஏற்று வந்திருக்கும் உங்கள் இருவருக்கும் எங்கள் நன்றிகள். இப்போது என்னுடம் பயிலும் மாணவர்கள் கேள்விகள் கேட்பார்கள். உங்களுடைய மேலான பதில்களை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி அமர்ந்தான்.
ஒரு மாணவன் எழுந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஐயா, மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்பதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா என்று கேட்டான்.
அவன் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்தால் அப்படித் தோன்றலாம். ஆனால் மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை. மற்ற உயிரினங்கள் போல தோன்றியவன் தான் மனிதனும்.
அப்படியென்றால் டார்வின் கூற்று தவறா.
சார்ல்ஸ் டார்வின் ஒரு முட்டாள். அவனுடயை கூற்றும் பிதற்றல் தான்.
என்ன சொல்கிறீர்கள்.
ஆம். மேலை நாடுகள் எழுதும் விஞ்ஞான கூற்றையும் வரலாறையும் படித்து பித்துக்களாக அலைகிறீர்கள். சற்றே உங்கள் அறிவையும் பயன்படுத்துங்கள்.
ஐயா நீங்கள் கூறுவது விளங்கவில்லை என்றான் அந்த மாணவன் பவ்யமாக.
தம்பி, நீ கற்றவையெல்லாம் மற்றவை. நீ பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் வெளிநாட்டு கண்டுபிடிப்புகள். இப்படி எல்லாவற்றிற்கும் வெளிநாட்டையே நம்பி இருக்கும் நீ, ஞானத்திற்கும் வெளிநாட்டை நாடுவது வருந்தத்தக்கது என்றான் ஞானி. அவன் இவ்வளவு அழகாக பேசியது எனக்கே பிடித்திருந்தது.
அனைத்து உயிரினங்களும் ஒரு சேர உலகில் வந்தன. சில உயிரினங்கள் தங்கியது. சில உயிரினங்கள் தங்கவில்லை. இன்னும் கூட முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா எனும் முட்டாள்தனமான கேள்விக்கே பதில் தேடிக் கொண்டிருக்கிறது விஞ்ஞானம்.
ஒரு ஆதாம் ஏவாளால் தான் இந்த மக்கட் பெருங்கடல் உருவானது என்றால் ஏன் கறுப்பு, மஞ்சள், வெள்ளை, மாநிற மக்கள் இருக்க வேண்டும். நீங்கள் படித்த டி என் ஏ மரபணு கூற்று என்னவாகும். இதிலிருந்தே தெரியவில்லையா, உலகில் பல இடங்களில் ஒரு சமயத்தில் பல்வேறு பகுதிகளில் மனிதனும் மற்ற உயிரினங்களும் தோன்றின. அதிலிருந்தே சந்ததிகள் வளர்ந்தன.
அறிவுக்கு அயல்நாட்டிற்கு போகாதே. உன் சான்றோர் எழுதியதையும் படி.
Wednesday, December 20, 2006
மீண்டும் ஞானி – 2. பகட்டு
மீண்டும் ஞானி – 2. பகட்டு
அன்று ஞானியை விருந்துக்கு அழைத்திருந்தேன். நன்றாக கீழே அமர்ந்து வாழை இலையில் போட்டு உணவை உண்டான். நடுவில் இரு முறை பேச முயன்றும் பதில் அளிக்க வில்லை. பிறகு கொல்லைபுறம் சென்று இலையை எங்கள் வீட்டு மாட்டுக்கு உணவாக கொடுத்துவிட்டு கை கழுவிவிட்டு மறுபடியும் தாழ்வாரத்தில் வந்து அமர்ந்தான்.
என்னிடம் என்ன காரியம் ஆக வேண்டும் என்று எனக்கு விருந்து அளித்தாய்? என்று நேரடியாக கேட்டான்.
காரியம் ஆக வேண்டும் என்பதால் தான் உனக்கு விருந்து அளித்தேன் என்று நினைக்கிறாயா? என்று கோபமாக கேட்டேன் நான்.
ஆம். மனிதர் காரியம் ஆக வேண்டும் என்றால் மட்டுமே யாருக்கும் சோறு போடுவர். வேண்டும் என்றால் காலையும் பிடிப்பர்.
இருக்கட்டும். ஆனால் இந்த காரியம் எனக்காக இல்லை.
அப்படியா சந்தோஷம். விஷயத்தை சொல்.
என்னை ஒரு பள்ளியின் கருத்தரங்கில் பேச அழைத்திருக்கிறார்கள். நீயும் வந்தால் உன் ஞானத்தை வளரும் பிள்ளைகளுடன் பகிர்ந்துக் கொள்ளலாம். நான் உன்னிடமிருந்து கற்ற விஷயங்கள் பல. அதில் சில வற்றை செயலாக்கி பயனும் கண்டேன். சில அறிவுரைகளை என்னால் பின்பற்ற முடியாத சூழ்நிலைகள்.
நல்லது. எந்த தேதி?
அடுத்த வாரம்.
ஒ நான் அடுத்த வாரம் அமெரிக்கா போகிறேன். வர முடியாதே.
ஒ நீ வெளி நாடெல்லாம் போயிருக்கிறாயா?
என்ன சந்தேகம் உனக்கு? 50 நாடுகள் போயிருக்கிறேன்.
ஒ நல்ல விஷயம். அதனால் ஒன்றும் பிரச்சனையில்லை. நீ என்று வரமுடியுமா அன்றே கருத்தரங்கை வைத்துக் கொள்ளலாம். எப்போது வரமுடியும் என்று சொல்?
அடுத்த மாதம் 14ம் தேதி. சரியா?
சரி. நான் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கிறேன். நீ உன் வெளிநாட்டு அனுபவங்களை சொல்லேன்.
நானே கற்றுக் கொண்ட ஒரு விஷயத்தை பற்றி சொல்லவா என்று கேட்டான். “நானே” – ரொம்பத்தான் கர்வம் இவனுக்கு என்று நினைத்துக் கொண்டேன்.
சரி சொல்லேன்.
நான் ஒரு முறை இங்கிலாந்து செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தேன். என் அருகில் இரண்டு மனிதர். (மறுபடியும் அந்த ஞானித்தனம்). இருவரும் இலவச மதுபானம் குடிக்கும் போட்டியில் இருந்தனர் போலும். விமானப் பணிப்பெண்ணுடன் சண்டை. இன்னும் மது அளிக்க வேண்டும் என்று. அவளோ நீங்கள் அதிகம் குடித்துவிட்டீர்கள். இதற்கு மேல் வேண்டாம் என்று மன்றாடினாள். அவர்கள் கேட்கத்தயாராகவில்லை. சரியென்று இன்னொரு சுற்று மதுபானத்தை கொண்டு வந்து கொடுத்தாள். அதை குடித்த அந்த மனிதன் சில நிமிடங்களில் வாந்தி எடுத்து மூச்சு முட்டி அனைவரையும் முகம் சுளிக்க வைத்துவிட்டான்.
பிறகு அவன் சண்டையிட்ட அதே பெண் அவனுக்கு பிராணவாயு வைத்து அவன் நிலமையை சீராக்கினாள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்று என்னை கேட்டான்.
விமானத்தில் குடிக்கக் கூடாது, சரியா? என்று உற்சாகமாக கேட்டேன்.
முட்டாள். அது குழந்தைகளுக்கு கூட தெரியும்.
பிறகு?
உன் உடலுக்கும் மனதுக்கும் ஒவ்வாத விஷயங்களை வெறும் பகட்டுக்காக மட்டும் செய்யாதே. இது தான் நான் கற்றுக் கொண்ட பாடம்.

சிந்தையில் ஆயிரம்
| ஆசிரியர் : | ஐகாரஸ் பிரகாஷ் |
குறிப்பிடத்தகுந்த நகைச்சுவை எழுத்தாளரும் விமர்சகருமான ஐகாரஸ் பிரகாஷின் தேர்ந்தெடுத்த சிறப்புக்கட்டுரைகளின் தொகுப்பு. தமது நுணுக்கமான ரசிப்புத் திறமையாலும் தேர்ந்த வெளிப்பாட்டு உத்திகளின்மூலமும் லட்சக்கணக்கான தமிழ் இணைய வாசகர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட எழுத்தாளரின் படைப்புக் கடலில் குளித்தெழுங்கள்!
download link:
file size : 550 Kb
file format : zip
Link
http://www.freewebs.com/iamsvs/tamilpdf/Sample1.ZIP
Tuesday, December 19, 2006
நகைச்சுவை கட்டுரை
நகைச்சுவை கட்டுரை.pdf
தமிழ் நகைச்சுவை நையாண்டி கட்டுரைகள்
Size: 214.8kb
file format : pdf
Download:
Rapidshare Links
http://rapidshare.com/files/8213427/__2984___2965___3016___2970
___3021___2970___3009___2997___3016____2965___2975___3021___2975___3009__
Megaupload Links
http://www.megaupload.com/?d=VZ149MVV

மீண்டும் ஞானி – 1. பொடி மட்டை
மீண்டும் ஞானி – 1. பொடி மட்டை
17 வருடங்களுக்கு பிறகு ஞானியை நான் வழக்கமாக செல்லும் தேனீர் கடையின் வாசலில் சந்தித்தேன்.
வணக்கம் ஞானி, நலமா என்று கேட்டேன்.
அடேடே மனிதா, நான் நல்ல சுகம். நீ எப்படி என்றான்.
என்னை உற்றுப் பார்த்தான். நான் அவனை உற்றுப் பார்த்தேன்.
நான் தொந்தியுடன் தலை நரைத்து கிழடு தட்டியிருந்தேன். அதை அவன் பார்ப்பதை நன்கு உணர்ந்தேன். அவனோ அதே போல் இருந்தான். கண்களில் அந்த துருதுருப்பு, உடலில் எந்த மாற்றமும் இல்லை. உடை மட்டும் வேட்டி சட்டையாக மாறியிருந்தது. தலை முடியில் நரையேதும் இல்லை.
ஞானி, அதெப்படி நீ 17 வருடத்திற்கு முன் பார்த்த மாதிரியே இருக்கிறாய்.
அது உனக்கு அநாவசியம் என்றான்.
சொல்லேன் கேட்போம் என்றேன் நான்.
பொடி மட்டை தும்முமா என்று கேட்டான்.
நான் யோசித்து பார்த்துவிட்டு, தும்மாது என்றேன்.
அதெற்கென்ன இவ்வளவு யோசனை. சரிதான் தும்மாது என்றான்.
அதெற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்.
இருக்கிறது. வாழ்கை பொடி போல. நீ பொடி மட்டை போல. வாழ்கையின் நிகழ்வுகள் உன்னை பாதிக்காவண்ணம் பார்த்துக் கொண்டால் உன் உடலிலும் மனதிலும் எந்த மாற்றமும் இருக்காது. பொடி மட்டை தும்மக்கூடாது.
சரிதான்.
சாராய பாட்டில் சாராயம் குடித்தால் நீ குடிக்க என்ன மிஞ்சும். பாட்டிலுக்கு போதை ஏறக்கூடாது. நீ பாட்டில். உன்னை சுற்றி இருப்பது சாராயம். பார்த்து போதையில் விழாது இருந்தால் பிரச்சனையே இல்லை என்றான்.
முதன் முறையாக அவன் பேசியது எனக்கு நன்றாக புரிந்தது. ஒரு வேளை அவன் எனக்கு புரியும் வகையில் பேசினானா இல்லை எனக்கு அறிவு வளர்ந்துவிட்டதா என்று தெரியவில்லை.
நான் போகலாமா என்று கேட்டான்.
அடேடே என் அனுமதியெல்லாம் கேட்கிறானே. இதே பழைய ஞானியாக இருந்தால் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவானே என்று நினைத்தேன். பிறகு தான் தெரிந்தது அவன் மாறவில்லை. நான் அவனுடயை சைக்கிளில் கைவத்து நின்றுக் கொண்டிருந்தேன்.
கையை எடுத்ததும் சட்டென்று ஏறி பட்டென்று மாயமானான் ஞானி.

Subscribe to Posts [Atom]